கூட்டமைப்பின் வாக்குகளும் ரணிலுக்கு! வெற்றியின் இரகசியத்தை வெளியிட்ட எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைந்தது 5 வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ளன என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு தெரிவானதுடன் நாட்டுக்குள் புதிய எதிர்பார்ப்பு உருவாகும்.

இலங்கையில் புதிய எதிர்பார்ப்பு ஏற்படும் என எண்ணுகிறேன். நாட்டுக்கு தற்போது அனுபவமுள்ள தலைவர் இருக்கின்றார். அனுபவமுள்ள தலைவர் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவரும் இணைந்தால், தேசிய அரசாங்கம் அமையும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.

நாட்டுக்கு புதிய எதிர்ப்பார்ப்பும், நம்பிகையும் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவை கைவிட்டு நாங்களும் சென்றோம், மீண்டும் அவரிடம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதான் விதி என்பது.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply