இன்னமும் 10 நாட்களில் ரணிலில் முகம் தெரியும்! – மூத்த அரசியல்வாதி சுட்டிக்காட்டு

போராட்டக்காரர்களையும், மக்களையும் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு சமாளிக்கப்போகின்றார் என்பது எதிர்வரும் 10 நாட்களில் தெரியும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கெ சிவஞானம் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாரளுமன்ற பெரும்பான்மையுடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோட்டாவுக்கு எதிராக போராடும் மக்கள் ரணிலையும் வெளியேறுமாறு கோரித்தான் இப்போது போராட்டம் செய்கிறார்கள்.

இனியும் போராட்டம் தொடரலாம். குறித்த போராட்டத்தை எவ்வாறு ரணில் கையாளப் போகின்றார் என்பது இனிமேல் தான் தெரியவரும். அதேபோன்று தான் பொருளாதார சிக்கலை எவ்வாறு கையாளப்போகின்றார் என்பதும் தெரியவரும்.

இது நெருக்கடி நேரம். அவருக்கு நிறையப் பணிகள் உள்ளது.மக்களுக்கான நிவாரணம், ஐ.எம்.எப் கலந்துரையாடல், மக்களின் வரிசை யுகம் இப்படி நிறைய பிரச்சினைக்கு அவர் தீர்வு காண வேண்டும்.

ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்கான பெருமை கொள்ள முடியாது. மக்களையும் போராட்டங்களையும் அவர் சமாளிக்க வேண்டும். இன்னும் 10 நாட்களில் தான் ரணிலின் நிலைப்பாடு தெரியும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply