மக்கள் போராட்டத்தை அடக்குபவரே ஜனாதிபதியாக தெரிவு: விமல்

கொழும்பு,ஜுலை 20

மக்கள் போராட்டங்களை 88, 89 காலப் பகுதியில் அடக்கியது  போன்று தற்போது ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை அடக்க முடியுமான ஒருவரையே ஜனாதிபதியாக நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது.

ஆனால் அப்போது சமூக வலைதளங்கள் இருக்கவில்லை என்பதனை புரிந்து கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும் என சுயாதீன கட்சிகளின் கூட்டணி எம்.பியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர்  நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்.

அவர் தேசியப் பட்டியலில் ஒன்றரை வருடத்தின் பின்னர் வந்தவர். இறுதியில் அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர் என்றார்.

Leave a Reply