நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட வாவியில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்ததாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் யஹலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் விஷ்வா (வயது 17) மற்றும் மொஹமட் அர்பாத் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் தேடுதல் நடத்தி அவர்களின் சடலங்களை மீட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply