
கொழும்பு,ஜுலை 20
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு எவ்வாறு மீள்வது என்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தெளிவான வேலைத்திட்டம் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 5 மாதங்களுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





