மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்து வந்த நிலையில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இந்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது அவசியமாகும். இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.




