ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ரணில்!

கொழும்பு, ஜூலை 21: எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.

பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பின் போது, 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவானார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும 82 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல்கள் சிறப்பேற்பாடுகளின் 11 ஆம் பிரிவின் கீழ், 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply