ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஒருவரை தெரிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவ குழு கூட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இதன்படி, வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஆசனம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
எனினும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனமொன்று கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





