S.W.R.D பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

S.W.R.D பண்டாரநாயக்க உருவ சிலை அமைந்துள்ள 50 மீற்றர் சுற்று வட்டாரத்துக்குள் தொடர்ந்தும் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

S.W.R.D பண்டாரநாயக்க உருவ சிலைக்கு முன்னால் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

S.W.R.D பண்டாரநாயக்க உருவ சிலை அமைந்துள்ள 50 மீற்றர் சுற்று வட்டாரத்துக்குள் ஒன்று கூடுவதற்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போதும் குறித்த பகுதிக்குள் குழுவொன்று தங்கியிருப்பதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே நீதிமன்ற உத்தரவினை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply