எரிவாயு பிரச்சினைக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு

கொழும்பு, ஜுலை 21

கடந்த 10 நாட்களில் 12.5 கிலோகிராம் நிறையுடைய சுமார் 7 இலட்சம் சமையர் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மேலும் 40 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கும் மேலாக எரிவாயு விநியோகம் இடம்பெறாத நிலையில், கடந்த 11ஆம் திகதி முதல் மீண்டும் எரிவாயு விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, நாடு முழுவதும் 47 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களுக்கான தேவைப்பாடு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறையை 100 வீதம் தீர்க்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply