தாய்மாருக்கு வாகன வசதி ஏற்படுத்துங்கள்:பொது அமைப்புகள் கோரிக்கை!

மாங்குளம் ஆதார மருத்துவமனையிலிருந்து மகப்பேற்றுக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனைக்குச் செல்லும் பெண்கள் மகப்பேறின் பின்னர் மாங்குளம் ஆதார மருத்துவமனைக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாட்டை முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் முன்னெடுக்க வேண்டும் என மாங்குளம் பொது அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கடந்த பல ஆண்டுகளாக மாங்குளம் மருத்துவ மனைக்கு மகப்பேற்றுக்காக செல்லும் பெண்கள் மருத்துவமனையின் அம்புலன்ஸ் மூலம் கிளி நொச்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

மகப்பேற்றின் பின்னர் பெண்கள் குழந்தைகளுடன் ஓட்டோ அல்லது பஸ்ஸிலோ பயணித்து வந்தனர் . ஆனால் , தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டால் ஓட்டோ .பேருந்துகள் சீராக சேவையில் ஈடுபடுவதில்லை .

அவ்வாறு சேவையில் ஈடுபட்டாலும் ஓட்டோவில் செல்ல பெருமளவு பணம் தேவைப்ப டுகின்றது . அத்துடன் குழந்தைகளுடன் பயணிக்க முடியாத அளவுக்கு பஸ்களில் அதிக மக்கள் பயணிக்கின்றனர் .

இந்த நிலையில் மாங்குளம் ஆதார மருத்துவம னையிலிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்குச் செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மகப் பேற்றை நிறைவு செய்த பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் மாங்குளம் ஆதார மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் முன்னெடுக்க வேண்டும் என மாங்குளம் பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply