கள்ள நாயே என திட்டிய அரச உயர் அதிகாரி-அரச ஊழியர் பொலிஸில் முறைப்பாடு!

அரச ஊழியர் ஒருவரின் குடும்ப அட்டையில் “அ ,உ” காட் மாற்றும் விடயம் தொடர்பாக இடம்பெற்ற தர்க்கத்தில் இரண்டு அரச உயர் அதிகாரியும்,அரச ஊழியரும் ஊழியர்கள் மாறி மாறி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.ஒரு அரச உயர் அதிகாரி தன்னை தாறுமாறாக பேசியதாக தெரிவித்து , அரச அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நான் திருநெல்வேலியில் வசிக்கின்றேன். 20.07.2022 அன்று எமது பிரிவில் உள்ள கிராமசேவகரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது .அதில் ‘ அ ‘ கார்ட் ஐ என்பதை ‘ உ ‘ என்று மாற்றியது யார் என்றார் . நான் சொன்னேன் இரண்டு வாரத்திற்கு மேல் தங்கள் அலுவலகத்தில் பெற்றோல் வெள்ளை கார்ட் பதிவிற்காக வைத்திருந்தீர்கள் . எனக்கும் இதற்கும் சம்மத்தம் இல்லை என்றேன் .

அத்துடன் இது உங்கள் தவறு என்றேன் .பின்னர் நான் நல்லூர் பிரதேச செயலாளருடன் நேரில் சென்று தெரிவித்தேன். அதற்கு அவர் இது சம்மந்தமாக காலையில் கதைக்கப்பட்டது . இது பற்றி பார்ப்போம் என்றார்.

பின்னர் பெற்றோல் கார்ட் பதிவு செய்யப்படும் 5 ம் அறையில் AD என்னும் பதவியில் உள்ளவர் , என்னை தொலைபேசியிலும் , நேரிலும் கள்ள கார்ட் பதிந்த கள்ள நாய்களே என்றும் பல தடவைகள் உறுத்திப் பேசினார்.

அரச அலுவலர் நீங்கள் இப்படி கதைக்க வேண்டாம் என்றேன் நான் . மீண்டும் அவர் என்னை அப்படி சொன்னதற்கு நான் ‘ உடைப்பனடி ‘ என்று நானும் உறுத்துப்பேசினேன். பின்னர் நல்லூர் பிரதேச செயலகர் என்னை வெளியில் போகும் படி சொன்னார் . உடனே நான் யாழ்ப்பாணம் பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply