எரிபொருள் அனுமதிச் சீட்டு இன்று சோதிக்கப்பட்டது!

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டத்தின் முன்னோடி திட்டம் இன்று கொழும்பில் சோதனை செய்யப்பட்டது.

கொழும்பில் உள்ள 06 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடு அடிப்படையிலான முறைமை சோதனை செய்யப்பட்டது.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக பதிவு செய்யுமாறும், QR குறியீட்டை http://fuelpass.gov.lk என்ற ஊடாகப் பெற்றுக் கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

QR குறியீடுகளைப் பயன்படுத்தும் தேசிய எரிபொருள் பாஸ் திட்டம் ஜூலை 25, 2022 திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply