ரணில் கொடுத்த ஐஸ் வைத்தியம் – மகிழ்ச்சியில் கட்சித்தலைவர்கள்

புதிய நடைமுறையின் கீழ் நாட்டை முன் நகர்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர்,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளின் அடிப்படையில்,சபாநாயகர் விசேட கட்சித் தலைவர் கூட்டம் ஒன்றை இன்று கூட்டினார்.

பாராளுமன்றத்தை ஒத்திவைத்து,விரைவில் சம்பிரதாயங்களுடன் பாராளுமன்றை கூடுவதற்கு ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

இதன்போது கொள்கை விளக்கத்தை அவர் முன்வைப்பர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.அமைச்சரவை அப்படியே இருக்கும்.அத்துடன் கட்சிகளை இணைத்து தேசிய சபை ஒன்றை ஒன்றை அமைக்க அவர் முடிவு செய்துள்ளார்.

காலி முகத்திடலில் போராடும் மக்களுக்கு விகாராமகா தேவி பூங்காவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கே கோ கோம் ரணில் என்று அவர்கள் போராடலாம்.நல்லாட்சி அரசில் காணப்பட்ட 19 ஆம் திருத்த நலனை அப்படியே நடைமுறை அவர் எண்ணியுள்ளார்.

பாராளுமன்ற குழுக்களை அமைத்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என ரணில் தெரிவித்துள்ளார்.

ஆகவே மக்கள் நலன் தொடர்பான விடயங்களுக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply