விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்பு!

முந்தல் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பத்துளு ஓயா பகுதியில் மூடப்பட்டிருந்த விடுதி ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக முந்தல் பொலிஸ் குற்றப்பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த விடுதியில் தேடுதல் நடவைக்கையில் ஈடுபட்ட வேளை குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லயெனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply