இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய ஜூன் மாதத்திற்கான முதன்மை பணவீக்கம் 58.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கம், 2022 மே மாதத்தில் 45.3 சதவீதத்திலிருந்து 2022 ஜூனில் 58.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய, உணவுப் பணவீக்கம், 2022 மே மாதத்தில் 58.0 சதவீதத்திலிருந்து 2022 ஜூனில் 75.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உணவுப் பணவீக்கம் (Y-o-Y) மே 2022 இல் 58.0 வீதத்திலிருந்து ஜூன் 2022 இல் 75.8 வீதமாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் (Y-o-Y) 2022 மே மாதத்தில் 34.2 வீதத்திலிருந்து, 2022 ஜூன் மாதத்தில் 43.6 வீதமாக அதிகரித்துள்ளது.
ஜூன் 2022 இல் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்திர மாற்றம் 10.91 வீதமாக பதிவாகியுள்ளது, ஏனெனில் உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் முறையே 7.25 வீதம் மற்றும் 3.66 வீதம் விலை உயர்வு காணப்பட்டது.
இதற்கு, முறையே 7.25 சதவீதத்தினையும் 3.66 சதவீதத்தினையும் கொண்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.
அதற்கமைய, அரிசி, காய்கறிகள், உடன் மீன், சீனி, பால்மா, மற்றும் கருவாடு என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் பதிவாகியுள்ளன.
மேலும், உணவில்லா வகையினுள் மாதகாலப்பகுதியில் போக்குவரத்து (பெட்ரோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள், வழமையான வீட்டுப் பேணல் மற்றும் சிற்றுண்டிச்சாலை மற்றும் சுற்றுலா விடுதி போன்ற துணை வகைகளில் அதிகரிப்புக்கள் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 மே 16.3 சதவீதத்திலிருந்து 2022 ஜூனில் 20.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.
மேலும், பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், 2022 மே 37.7 சதவீதத்திலிருந்து 2022 ஜூனில் 49.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 மேயின் 13.0 சதவீதத்திலிருந்து 2022 ஜூனில் 16.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.
பிறசெய்திகள்





