
அரசியல் தமக்கு கசந்து விட்டதாக பிரபல தொழில் அதிபரும், கடந்த அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
தெற்கின் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் குறித்து தாம் விரக்தி அடைந்துள்ளதாகவும், விரைவில் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் முரண்பாடுகள் காரணமாக பதவி விலகவில்லை எனவும், அரசியல் பிடிக்கவில்லை என்பதனால் பதவி விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டால் அவருக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் உத்தேசம் உள்ளதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவ்வாறு திட்டங்கள் கிடையாது தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ச பதவி துறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக தம்மிக்க பெரேரா தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





