புதிய மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த அறிவிப்பு

6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான மேன்முறையீட்டு முடிவுகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளுக்கு அமைய 6 ஆம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதன்படி குறித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முதற்கட்ட மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான விடயங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

g6application.moe.gov.lk எனும் இணையத் தளத்திற்கு பிரவேசித்து பரீட்சை சுட்டிலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பார்வையிட முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply