இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில், இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1949 பிறந்த பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு வயது 73 ஆகும், இவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன், சர்வதேச ரீதியில் வெளிநாட்டு பொருளாதார சிறப்பு பட்டங்களை பெற்றவர் ஆவார்.
1973 ஆம் ஆண்டு அரசியலுக்கு பிரவேசித்த இவர், இது வரையில், கல்வி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், நீர்பாசனம் உள்ளிட்ட மிக முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய நாடாளுமன்றத்தின் சபை முதல்வராகவும் தினேஸ் குணவர்தன செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





