காலிமுகத்திடலில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய பொலிஸ் அதிகாரி!

கொழும்பில் காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்களை செய்தி சேகரிக்க முற்பட்ட இலங்கை ஊடகவியலாளரை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற விசேட நடவடிக்கையின் போது ஜனாதிபதி செயலகத்தை உள்ளடக்கிய பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து அரச கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்களை வெளியேற்றினர்.

இதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, ஊடகவியலாளரை கடமைகளை மேற்கொள்வதற்காக பிரதேசத்திற்குள் பிரவேசிக்க விடாமல் தடுத்துள்ளதை காணொளி காட்சிகளாக வெளியிட்டுள்ளார்.

மூத்த அதிகாரி ஒருவர் ஊடகவியலாளரை அணுகி தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் அவதானிக்க முடிகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply