‘கோல்பேஸ்’தாக்குதலை விவாதிக்க சபையைத் திங்களன்று கூட்டுங்கள்!பிரதமரிடம் சஜித் அணி கோரிக்கை

நாடாளுமன்றத்தை நாளைமறுதினம் திங்கட்கிழமை கூட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

சபையைக் கூட்டி நேற்று அதிகாலை ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விவாதம் நடத்துமாறும் பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இது தொடர்பான கோரிக்கையைப் பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply