வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை இரத்தினகற்கள்! – கட்டுநாயக்கவில் சிக்கிய நபர்

கொழும்பில் இருந்து இந்தியாவுக்கு சென்றவரிடமிருந்து பெருந்தொகை இரத்தின கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை செல்ல முற்பட்டவரிடமிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபரின் வயிற்றில் 56 பக்கட்டுகளில் 1,746 இரத்தினக் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது, குறித்த நபர் தனது வயிற்றில் இரத்தின கற்களை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply