செப்ரெம்பருக்குள் பணவீக்கம் 70  சதவீதமாக அதிகரிக்கும்! 

நாட்டின் பணவீக்கம்  எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள்  70 சதவீதமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் நிதியுதவியால் இலங்கையின் பணவீக்கத்தைச் சீர்செய்ய முடியாது. அது தற்காலிக தீர்வு மட்டுமேயாகும்.

தற்போது இலங்கை எதிர்நோக்கிய நிதி, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை சீர் செய்ய புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முடியும் என நம்புகின்றேன்.- என்றார்.

Leave a Reply