யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை; மூவர் சிக்கினர்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரப் பிரதேசத்தில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் கேரளக் கஞ்சாவுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அராலி மத்தி பிரதேசத்திலிருந்து 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நேற்றையதினம் சிறியளவு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply