குரங்கு அம்மை நோயால் சர்­வ­தேச அவ­சர நிலை அறிவிப்பு!!

ஆபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அதனாம் டெட்ரோஸ் தெரிவிக்கையில்,

இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் உடன் மேற்கொள்ள வேண்டும் –என்றார்.

Leave a Reply