இலங்கைக்கான சீனத் தூதுவர் வி.ஜென்ஹான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நட்பு ரீதியான இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கும் தற்போதைய கடன் நெருக்கடியை நிர்வகிப்பதற்குத் தேவையான ஆதரவையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீனத் தூதர் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.




