விசேட டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம்

கொழும்பு,ஜுலை 25

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் எண்ணாயிரத்துக்கும்  அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை  அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நாளைய தினம்  ஒரு மணிநேரம் சுற்றாடலை  துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை  தொடர்பில்  ஒவ்வொரு நிறுவனத்திற்கு  பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படுவதுடன் குறித்த நடவடிக்கை கண்காணிக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply