
நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 708 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு தேசிய எரிபொருள் அனுமதியான கியூ.ஆர். குறியீட்டு முறைமை
வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 25 இடங் களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.
எரிபொருள் கொள்வனவுக் கட்டளை வழங்குவதில் தாமதம் மற்றும்
விநியோகம் தாமதம் காரணமாகவும், சோதனை செய்யப்படாத 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களில் பரிசோதனை செய்யப்படும் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.





