போராட்டக்காரர்கள் அகற்றம் பாராளுமன்றில் புதன் விவாதம்!

காலிமுகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்ட கோ கம’ போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றியமை தொடர்பில் விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை இது தொடர்பாவிவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விவாதத்துக்காக பாராளுமன்றத்தை கூட்டுமாறு நேற்று எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.

எரிபொருள் பிரசிச்னை காரணமாக பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால் அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக புதன்கிழமை பாராளுமன்றம் கூடும்போது இந்த விடயத்தையும் விவாதிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply