கியூ. ஆர். முறைமை திருமலையில் அமுல்

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (கியூ. ஆர்.) முறை மற்றும் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் என்பவற்றை கவனத்தில்கொண்டு பரீட்சாத்தமாக எரிபொருள் விநியோகிக்கும் செயல்பாடு நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிலையத்தில் கியூ. ஆர். முறை பரீட்சிக்கப்பட்டு எரிபொருள்
விநியோகிக்கப்பட்டதுடன் மாவட்ட அரச அதிபர் பி. எச். என். ஜயவிக்ரமவின் அறிவுரைக்கு அமைய தேசிய எரிபொருள்அனுமதி அட்டையை பெற முடியாதவர்களுக்கு இலவசமாக தொழிநுட்ப வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் உத்தியோகத்தர்களும் கடமையில் அங்கு அமர்த்தப்பட்டு உரிய சேவைகளை வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply