யாழில் பெண்ணின் வீட்டில் நுழைந்த இளைஞன் மடக்கி பிடிப்பு!

யாழில் தனியாக வாழும் பெண்ணின் வீட்டில் நுழைய முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இச்சம்பவமானது பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உய்ய வீட்டில் அந்த இளைஞர் சம்பளத்திற்கு பகலில் வேலை பார்த்துள்ளான்.

இந்நிலையில் அப்பெண்ணின் பெறுமதிமிக்க கைப்பேசி காணாமல் போயுள்ளதையடுத்து அப்பெண் அயலவர்களிடம் கூறியுள்ளார்.

அவர்கள் அந்த இளைஞனின் மீது சந்தேகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த இளைஞன் இரவு சாப்பாட்டு பொட்டலத்துடன் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்நபரை மடக்கிபிடித்த பொதுமக்கள் விசாரித்தனர்.

அதற்கு தனியாக இருக்கும் பெண்ணிற்கு துணைக்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி பற்றி கேட்டபோது தனக்கு தெரியாது எனவும் அவனை சோதனையிட்டபோது ஓடிக்களோனும் கத்தியும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply