இ.போ.ச ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நடத்துனர் மற்றும் உதவியாளர் அண்மையில் தாக்கப்பட்டிருந்தனர்.வடக்கு சாலைக்கு சொந்தமான பேருந்து ஊழியர்களே கல்கமுவ பகுதியில் இவ்வாறு தாக்கப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து வடக்கு பிராந்தியம் தழுவியதாக கடந்த இரண்டு நாட்களாக ,போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு பணிப் பகிஸ்கறுப்பு இடம்பெற்றது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மக்கள் பொதுப் போக்குவரத்தை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இரண்டு நாட்களாக பேருந்து சேவைகள் இடம்பெறாமையால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளநிலையில்,போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply