நாட்டிற்கு டொலரை பெற்றுக்கொள்ள கடலுணவு ஏற்றுமதியாளர்களிடம் கலந்துரையாடல்

இலங்கையின் கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளுக்கு எரிபொருள் தட்டுப்பாடு பெரும் சவாலாக காணப்படுகின்றது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக கடலுணவு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பினரை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில், கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டொலர்களை ஏற்றுமதியாளர்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கடற்றொழில் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் முன்வைத்துள்ளார்.

இதேவேளை ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply