கல்யாண காலத்தில் தேடும் கல்யாண முருங்கை!

சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் திருமண நிகழ்வினை நடத்தும் போது மணமகனின் வீட்டில் தாலிக்குப் பொன் உருக்கும் சடங்கு நடத்தும் போது கன்னிக்கால் நடுவது வழக்கம்.

கன்னிக் காலுக்குப் பெரும்பாலும் முள்முருக்கு மரத்தின் மொத்தமான தடியை( கதிகாலை ) நடுவார்கள். சில இடங்களில் கல்யாண முருங்கை மரத்தின் தடியை நடுவார்கள்.

கடந்த 2006 ஆம் ஆண்டு யூன்,யூலையில் சிக்குன் கூனியாக் காய்ச்சல் வடபகுதியைத் தாக்கிய போது முள்முருங்கை, கல்யாண முருங்கை மரங்கள் இலைச் சுருட்டு நோய்க்கு உள்ளாகி முற்றாக அழிந்து போயின.

அதற்குப் பிறகு மேல் மாகாணத்திலிருந்து முருங்கை மரத் தடிகளைக் கொண்டு வந்து நட்ட போதும் அவையும் இலைச் சுருள் நோய்க்கு உள்ளாகின.

இதனால் முள்முருங்கை மரத்துக்குப் பதிலாக வெள்கிழுவை, கரும்பு போன்றவற்றின் தடிகளை நட்டுக் கன்னிக்கால் நடும் மரபு உருவாகி உள்ளது.

ஆனாலும் இலைச் சுருட்டு நோய் இல்லாத கல்யாண முருங்கைத் தடியைத் தேடித் திரிவோர் உள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply