மாற்றுப்பாலின ஒடுக்குமுறை ; யாழ்.பல்கலையில் விழிப்புணர்வு பேரணி

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணியொன்று நேற்று (25) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் ஊடாக சென்று விஞ்ஞான பீட நுழைவாயில் ஊடாக பல்கலைக்கழகத்துக்குள் சென்று நிறைவடைந்தது.

அத்துடன் மாற்றுப்பாலின சமூகத்தினர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றுகையொன்றும் இடம்பெற்றுள்ளது.

பேரணியில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply