நாம் கை காட்டும் நபர்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்புங்கள் – பிரதேச செயலகம் அடாவடி

சங்கானை பிரதேச செயலகத்தால் எமது ஊழியர்களை அழைத்து தங்களுடைய பணியாளர்களுக்கும் தம்மால் சுட்டிக்காட்டப்படுகின்ற வாகனங்களுக்கும் மட்டுமே எரிபொருளை விநியோகிக்க வேண்டும், வேறு எந்த வகையிலும் எரிபொருள் விநியோகிக்க கூடாது என்று கட்டளை பிறப்பித்ததாக சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவதாசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் என்பது கொள்ளைடிப்பவர்கள் அல்ல, எந்த ஒரு இடர் பொதுமக்களுக்கு ஏற்பட்டாலும் நிறைவான சேவையை குறைந்த விலையில் வழங்குபவர்கள்.

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சித்தன் கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் சீராக கியூபார் குறியீட்டு நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கியூபார் முறைகளுக்கு மேலாக பங்கீட்டு அட்டைகளையும் நாங்கள் நேற்று பரிசோதனை செய்தே மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டோம்.

காரணம், எரிபொருளை பெறாத எமது பிரதேச மக்கள் எரிபொருளை பெற வேண்டும் என்பதற்காகவே.

அண்மைக்காலமாக சங்கானைப் பிரதேச செயலகத்திற்கும், எமது சங்கானை பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவுபடுத்த வேண்டிய கடமை காணப்படுகின்றது.

அந்த வகையில், கடந்த மாதம் பிரதேச செயலகத்தால் எமது ஊழியர்களை அழைத்து தங்களுடைய பணியாளர்களுக்கும் தம்மால் சுட்டிக்காட்டப்படுகின்ற வாகனங்களுக்கும் மட்டுமே எரிபொருளை விநியோகிக்க வேண்டும், வேறு எந்த வகையிலும் எரிபொருள் விநியோகிக்க கூடாது என்று கட்டளையை பிறப்பிக்கும் வகையில் எமது பொது முகாமையாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக நாம் பொது மக்களுக்கு எரிபொருளை வழங்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம் என கேசவதாசன் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply