மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை! முஜிபுர் ரஹ்மான்

பெரும்போகம் ஆரம்பமாகி ஒரு மாதங்கள் கடந்து விட்டன. எனினும், அரசாங்கம்; விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக்கொடுப்பதில் அசமந்த நிலையை அடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைச் சூழலில் விவசாயிகள் அனைவரும் வீதிக்கு இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நெற்செய்கையாளர்கள் மட்டுமன்றி, கிழங்கு, தேயிலை, மரக்கறி செய்கையாளர்கள் உள்ளிட்ட விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் இந்த நாட்டுக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.

இரசாயன உர பயன்பாட்டிலிருந்து காபனிக் உர பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்று வர்த்தமானியை வெளியிட்ட அரசாங்கம் இன்று சகல விவசாயிகளையும் பாரிய பிரச்சினைக்குள் தள்ளியுள்ளது.

இந்தியாவிலிருந்து உரத்தைக் கொண்டு வருவதாகக் கூறிய அரசாங்கம், தற்போதைய நிலையில் அங்கிருந்து உரத்தை இறக்குமதி செய்துள்ளது.

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் உரத்தை கொண்டுவருவதாக விசாய அமைச்சர் கூறியிருந்தார். எனினும், 25,000 மெட்ரிக் தொன் உரத்தையே கொண்டுவந்துள்ளதாக நேற்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சகல விவசாயிகளையும் எடுத்துக்கொண்டால் 30 இலட்சம் மெட்ரிக் தொன் உரம் தேவையாகவுள்ளது.

இந்த அரசாங்கம் சொல்வதை செய்வதில்லை, செய்வதை சொல்வதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சியின் விசேட கூட்டம் நாளை?

Leave a Reply