சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக தகவல்!

<!–

சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக தகவல்! – Athavan News

நாடாளுமன்றத்தில் சபை முதல்வராக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபை முதல்வராக செயற்பட்ட தினேஸ் குணவர்தன அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே சபை முதல்வராக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினை நியமிக்க ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராக செயற்பட்ட சுசில் பிரேமஜயந்த, கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply