கருங்குளவி கொட்டியதில் உயிரிழந்த குடும்பப்பெண்

விறகு எடுக்க சென்றபோது கரும் குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராசசிங்கம் வீதி, வல்வெட்டி, வல்வெட்டித்துறையை சேர்ந்த ஈஸ்வரி பாஸ்கரன் (வயது- 60) என்பவராவார்.

மேலும் தெரியவருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) விறகு எடுப்பதற்காக மேற்படி குடும்பப் பெண் அயலில் உள்ள பகுதிக்கு சென்றபோது வீழ்ந்து இருந்த பனை ஓலையில் இருந்த கருங்குழவிகள் மூன்று அவரின் தலையில் கொட்டியுள்ளது.

இதனை சுதாகரித்துக் கொண்டு அவர் வீட்டுக்கு ஓடி வந்த போது அவரின் மகள் குழவிகளை அகற்றி உடனடியாக ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (25) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் அங்கு மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிறசெய்திகள்

Leave a Reply