கடத்தப்பட்ட வெரங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

சுதந்திர ஊடகவியலாளரும், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளரும், ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான அனத்தனி வெரங்க புஷ்பிகா, கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் இருப்பதாக இலங்கை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று (27) மதியம் இனந்தெரியாத குழுவினால் கடத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து, ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம், அவர் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுயாதீன ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான வெரங்க புஷ்பிகா கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து வேறு பயணத்திற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது கடத்தப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply