கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் – மீண்டும் நாட்டுக்கு வரவேண்டிய நிலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை அனுப்பவுள்ளது..

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு அழைப்பாணை அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நாட்டையும் மக்களையும் அவல நிலைக்கு இட்டு சென்றவர்களுக்கு எதிராக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது.

மேலும் க பிரதம நீதிபதி ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.

பிறசெய்திகள்

Leave a Reply