மொட்டுக் கட்சி உறுப்பினர்மீது அழுகிய முட்டை வீசி தாக்குதல்!

அநுராதபுரம் மாநகர சபை ஊழியர்களின் அழுகிய முட்டை தாக்குதல் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் மொட்டுக் கட்சியின் உறுப்பினர் சுரங்கி ரேணுகா சமரதுங்க நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மாநகர சபையின் மேயர் எச். பி. சோமதாச தலைமையில் நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில் மாநகரஆணையாளர் ருவன் விஜயசிங்கவுடன் மொட்டுக் கட்சி உறுப்பினர் ரேணுகா முறுகலில் ஈடுபட்டதுடன், அவரை
மோசமான வார்த்தைகளால்nதட்டி பாதணியால் தாக்கினார்nஎன்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றுக்nகாலை மாநகர சபைக்கு வந்தnகுறித்த பெண் உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த போது,மாநகர சபையின் அதிகாரிகள்nமற்றும் ஊழியர்கள் அவருக்குஎதிராக கோஷமிட்டனர்.

அத்துடன், அவரை அங்கிருந்துnசெல்லுமாறு தெரிவித்துள்ளனர்.ஆனால், அவர் அலுவலகத்தில்தொடர்ந்து இருந்ததால்,ஊழியர்கள் கோபமடைந்ததுடன் அவரை அமர்ந்திருந்தnநாற்காலியுடன் தூக்கிக்nகொண்டு கீழ் தளத்திற்கு
கொண்டு சென்றளனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல்nஉருவாகியிருந்தது.மாநகர சபையின் நுழைவாயிலுக்கு முன்பாகக் கூடியnஊழியர்கள் மொட்டுக்nகட்சியின் பெண் உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது குறித்த பெண் உறுப்பினர் மாநகர சபை உழியர்கள் தன்னைத் தாக்கினர் என்றுஅழுதுள்ளார்.

ஆனால், ஊழியர்கள் அவருக்கு எதிராகப்nபோராட்டம் நடத்தியதுடன் அவர்மீது அழுகிய முட்டை களால் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இதற்கு மேலாக மாநகர ஆணையாளர்மீது தாக்குதல் நடத்தியதற்கு ஆணையாளரிடம், இந்தப் பெண் உறுப்பினர்
மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊழியர்கள் கோஷமிட்டுள்ளனர்.

இந்த நிலையில்,அங்கு நிலைமை மோசமாக குறித்த பெண் உறுப்பினர் ஆணையாளரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், அவர் மீது ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாநகர சபைக்கு விரைந்து குறித்த பெண் உறுப்பினரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply