ராகமக்குள் புகுந்தது கொரோனா; ரயில் நிலையத்திற்கும் பூட்டு!

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் நிலை உயர்வடைந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ராகம ரயில் நிலையத்தின் கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அந்த ரயில் நிலையத்தின் அதிபருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராகம ரயில் நிலையத்தின் ஊழியர்கள் பலருக்கும் காய்ச்சல் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply