லஹிரு வீரசேகர – சுகாதானந்த தேரருக்கு பிடியாணை!

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது அலரி மாளிகையில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிட்டிய சுகதானந்த தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட தனிஷ் அலி, எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதன் பின்னரே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply