தனிஸ் அலி உள்ளிட்ட 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, ஒளிபரப்பு சேவைகளுக்கு இடையூறு விளைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட தனிஸ் அலி உட்பட 21 பேருக்கு எதிராக வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, தனிஸ் அலி எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதன் பின்னரே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply