ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக ருவான் நியமனம்!

குடியுரிமை பெற்ற ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் பல புதிய நியமனங்களை செய்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் டினூக் கொலம்பகே ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டினூக் கொலம்பகே 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக மற்றும் தொடர்பாடல் ஆலோசகராக பணியாற்றினார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை அதிகாரியாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply