அதிகரித்துவரும் கொரோனா; தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டும் மக்கள்!

கொரோனா பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் மீண்டும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் இவ்வாறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கமைய கடந்த வாரங்களை விட இந்த வாரத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply