வேகமாக அதிகரிக்கும் குரங்கம்மை நோய்; அமெரிக்காவில் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் குரங்கம்மை நோயின் தொற்று மிக வேகமான அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அவசரகால சட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரகடனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குரகம்மை நோயின் பரவல் வேகம் உலக நாடுகளில் அதிகரித்து வருவதாக தரவுகள் காட்டுவதாகவும் இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் தொழில்முறை ரீயாக செயற்படும் ஆண்புணர்ச்சியாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாலியல் தேவைகளை தீர்க்குமாறும், முடிந்தளவு குரங்கம்மையின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆண்கள் ஒத்தழைப்பு தரவேண்டும் என்றும் உலக தொற்று நோய் ஸ்தாபனத்தின் வைத்திய அதிகாரி மக்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நோய் பாலியல் தொடர்புகளினால் மாத்திரம் தொற்றும் தன்மை கொண்டது என்பதனால் பாலியல் விடயத்தில் மிக அவதானமாக இருக்கும் படி அமெரிக்காவும் தன்னுடைய நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை யப்பான் மேற்படி குரங்கம்மை நோய்க்கான மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் யப்பான் சுகாதார மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply