தேயிலைக் கொழுந்துகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

தேயிலைக் கொழுந்துகளின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் பச்சைத் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேயிலைத் தூள் 100 முதல் 130 ரூபா வரை விலை போனதாகவும் ஆனால் ஒரு கிலோகிராம் பச்சைத் தேயிலையின் விலை 260 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூபாவுக்கு நிகரான டொலரின் விலை அதிகரிப்பினால் தேயிலை விவசாயிகள் நன்மையடைந்துள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply