QR கோட் முறைமை புத்தளத்திலும் வெற்றி! (படங்கள் இணைப்பு )

புத்தளம் தில்லையடி ஜப்ரிஸ் எரிபொருள் நிலையத்தில் இன்று QR கோட் முறைமையின் கீழ் பெற்றோல் விநியோகம் செயற்பாடு பரீட்சாத்தமாக முன்னெடுக்கப்பட்டமை வெற்றியளித்துள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் வருகின்ற ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட உள்ள QR கோட் முறைமையின் எரிபொருள் விநியோகம் செயற்பாடு புத்தளம் தில்லையடி ஜப்ரிஸ் எரிபொருள் நிலையத்திலும் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR கோட் முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருள் விநியோகிப்பதாகவும் இல்லாவிடில் வாகங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் புத்தளம் தில்லையடி ஜப்ரிஸ் எரிபொருள் நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply